Friday, July 23, 2010

இப்படியும் அப்படியும்

காஜல் (வெ/05-06-2009/1630-1650 இ.நி.நே)

------------------------------------------------------------------------------------------

அட........! என்னங்க நீங்க ?

எப்ப பாத்தாலும்.... தொண தொணன்னு.... ஒரேயடியா ?

நாலும் நாலு விதமாத்தானிருக்கும்,

நாம மட்டும் என்ன ஒழுங்காம் ?!

எல்லாமே சரியா இருக்கோமா..?

எல்லாத்துலேயும்....

ஏதாச்சும்..குறை சொல்லிட்டுத்தானிருக்கோம்!

நம்மையும்.....மத்தவங்களும் சொல்லிட்டுதானிருக்காங்க !

நாம மாத்திக்கறோமோ......ஹூம்!

நாமா......! பாத்து திருத்திக்கிட்டாத்தானுண்டு!

இதுக்குப்போய் இவ்வளவு அலட்டிக்கணுமா ?

இன்னும் எவ்வளவோ பாக்கவும், தெரிஞ்சிக்கவுமிருக்கே,

இதுதான் தொடக்கமின்னு வெச்சிக்குவோமே ?

என்ன அப்படி வித்தியாசமா.......பாக்கறீங்க,

என்ன....! அட.....எல்லாம் சரிதானா....?!

Wednesday, June 18, 2008

கணினி

கண்ணையும் நினைவையும், கட்டிபிடிக்கும் ஓர் உன்னத கண்டுபிடிப்பு. காலம் மனிதனைக்கட்டிப் பிடிப்பதால் கண்ட முன்னேற்றமோ என்றே வியக்கவைக்கவைக்கிறது.

Sunday, May 11, 2008

உதவி

எந்த இடத்திலும்,நேரத்திலும்,எந்த வகையிலும் தேவைக்கேற்றபடி அன்பொழுக அளித்திடுதல் மாண்புக்குரியதாகும்.

ஆர்வம்

ஒவ்வொரு மனிதருள்ளும் எவ்வித பொருள் குறித்தும், அறிந்து கொள்ளும் ஆவல் இருப்பதுண்டு. இதனை சிலரிடம் அதிகம் காணலாம்.ஆனாலும் ஏனோ மிகப்பலரிடம் காண இயலாமல் போவது வருத்தத்திற்குரியது.இதனை இனம் கண்டு ஊக்கப்படுத்த வேண்டியது, நம் ஒவ்வொருவரின் மனித நேயத்திற்குரியதாகும்.வாருங்கள் ஆர்வப்படுத்துவோமே !

இனிய தமிழ்

"இறை அருள் அன்பே என்றும் நிலை" அன்பு எல்லா உயிர்க்கும் பொதுவானது.
மொழியும் பொதுவானது.
அன்பு கொள்ளுதல் மிக எளிதானது, ஆயினும் அது மிகவும் சிறப்பானது. உறவுகளை உலகில் மேற்கொள்வோம்.
மனங்களை வெல்வோம். வாருங்கள் உயிர்களை இணைப்போமே!

.